Saturday, April 16, 2011

தேர்தல் வாக்கு வர்த்தகத்தின் ஒரு வெளிப்பாடு, இதில் உங்களின் நிலைப்பாடு…??

2011 சட்டமன்ற தேர்தல்: தமிழ்நாடு

அரசியல் பங்கு வர்த்தகம்,
உச்சபட்ச விளம்பரம்
ஆட்சியை பிடிப்பதற்க்கான தேர்தல் அறிக்கை
சாதிய & மதப் பற்று
குறைகூறி தான் சிறந்தவன் என மெய்ப்பித்தல்
தனி மனிதப் பகையின் வெளிப்பாடு
சிறந்த தலைமை நாங்கள் இல்லை என ஒப்புதல்
உங்களை விட்டால் வேறு யாருமல்ல என மக்களின் ஒப்புதல்.

இவை எல்லாம் சேர்ந்ததுதான் 2011 சட்டமற்ற தேர்தல். இதில் யாருக்கேனும் மறுப்பு உண்டா..??

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 60 ஆண்டுகள் அரைகுறை உடையுடன் அலையும் உழைக்கும் வர்க்கம். உற்பத்திக்கான சரியான கொள்முதல் விலையின்றி அழிவின் விழிம்பில் விவசாயம் ஒருபுறம், அதே பொருட்களின் உச்சபட்ச விலையேற்றத்தில் தவிக்கும் மக்கள் ஒருபுறம். வாழ்க அரசியல்.

சாதிக்கு ஒரு கட்சி, சாதியை ஒழிக்க ஒரு கட்சி, சாதிய கூட்டணியுடன் அரசியல் தலைமை, அமோக ஆதரவு தரும் மக்கள். தேர்தல் அறிக்கை வெளியீடு சாதியை ஒழிக்க பாடுபடுவோம். பாடுபட்டு.. பாடுபட்டு.. இருக்கும் சாதியை விட, சாதி கட்சிகள்தான் அதிகம். சாதி என்னும் கதவுகள் பூட்டபட்டிருக்கும் நமது வீட்டைத் திறந்து வெளியேறாமல் எப்படி இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊருக்கு வெளிச்சம் கொடுக்கப்போகிறோம் எனும் சிந்தனையற்ற மக்கள் கூட்டம், வாழ்க அரசியல்.  

மிக நேர்த்தியான காணொளிக் கோணங்கள், அழகான காட்சியமைப்புகள், சீரிய சிந்தனையை தெளிக்கும் கருத்துக்களத்துடன் வகை வகையாய் விளம்பரங்கள் கடந்த ஒருமாதம் மக்களை வதைத்து எடுத்திருக்கும் சொந்த ஆதாயத்திற்க்கான தேர்தல் பரப்புரையின் புதிய வடிவமாய் காணொளிப் பரப்புரை. 2001ல் அவர்களிடம் இருந்த கருத்துக்களம் 2006ல் இவர்களிடம், மீண்டும் 2011ல் அவர்களிடம். இடமாற்றமே தவிர எதுவும் மாறவில்லை வாழ்க அரசியல்.
                 
கலைக் கூத்தாடிகளின் கூடுகையாகிப்போன பிரச்சார மேடைகள், என்னற்ற தலைவர்கள் கொள்கைகளை சீர்தூக்கி வளர்ந்த இயக்கங்கள் கலைக் கூத்தாடிகளின் கவர்சிகளுக்குள்ளும், விளம்பர விற்பனைக்குள்ளும் முடங்கிப்போன வேதனை. நீக்கமற நிறைந்திருக்கும் தலைமையின் வெற்றிடத்தை ஆதாய அரிதாரிகளிடம் தேடும் மனநிலையில் மக்கள், வாழ்க அரசியல்.

பழம்பெருமை பேசி நிகழ்காலத்தில் நிலைநிற்கத் தவறிய தமிழிய இயக்கங்கள். அதனூடே சவாரி செய்யும் அரசியல் கட்சிகள், பேச்சுப் போதை, இலவசப் போதை, அறியாமை போதை, ஆணவப் போதை, விளம்பரப் போதை, திரைத் துறைப் போதை, இன்னும் புதிய வடிவங்களில் வாழ்க அரசியல்.

செந்நீர் சிந்தி வாங்கிய ஆட்சி மாற்றம்,
கயவர் தம் கைகளில் சிக்கி நாற்றம்..

தமிழகத்தின் நிலையை என்னி நித்தம் தவிக்கும் ஒட்டுமொத்த இளைஞர்களில் ஒருவன்.

வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வர.இரா

8 comments:

  1. இவைகளை உண்மை என்று உணர்ந்து கொள்ளக் கூட வக்கற்று இருக்கும் அடிமைக் கூட்டம்.

    நல்ல சிந்தனைகள். உறைபோர்க்கு உறைக்கட்டும்.

    ReplyDelete
  2. மாற்றம் வரும்னு நம்புவோம்..வேற என்ன பண்ண..நம்ம தலைவிதி....

    ReplyDelete
  3. @ஆனந்தி..

    மிக்க நன்றி..

    ReplyDelete
  4. யார் எத்தனை ரவுண்ட் குடித்தார்கள் என்பதே இத்தேர்தலின் தலையாய பிரச்னை ஆக முன் வைக்கப்பட்டது நல்ல முன்னேற்றம்.

    ReplyDelete
  5. @ கக்கு - மாணிக்கம்:
    நிச்சயமாக உறைக்கும் என் நம்புவோம்,
    அனைத்து ஒட்டு பட்டையையும் இனைத்துவிட்டேன்,
    நன்றி.

    ReplyDelete
  6. @ ! சிவகுமார் !
    இன்னும் எத்தனை காலங்கள் என்று பார்கலாம்.

    ReplyDelete
  7. நல்ல சிந்தனைகள் நண்பா!

    ReplyDelete