Monday, November 23, 2009

இந்த நிலையும் மாறிவிடும்அவசர உலகில்
விரையும் தருனங்களில்,
விரயமாகும் பொழுதுகளில்,
நாம் எதையோ தேடி அலைகின்றோம்.
ஒருநாள் அனைத்தும் முடிவிற்க்கு வரும்....!
அன்று வாழ்க்கையை
ஒருமுறை திரும்பிப்பாருங்கள்,
எதற்க்கு அதிக முகியத்துவம்
கொடுத்தீர்கள் என்று.....!

************************************************தினக்கூலியாக இருக்கும் பாமரர் கூட
திருப்தியான வாழ்க்கை வாழ்கின்றனர்!
படித்து முடித்த பட்டதாரி
பட்டினியால் வாடுகின்றான்!
சிறுக சிறுக சேமித்தும்
சிறகொடிந்து கிடக்கும்
சில்லரை காசுகள்!
அர்த்தமற்ற தேவைகளுக்காக
அல்லல் படும் ஆழ் மனம்!
சிறகடித்து பறக்க வேண்டிய வயதில்
சிந்தனைகள் மண்டிக்கிடக்கும்
என் உள் மனம்!
இருப்பினும் என்றாவது ஒருநாள்
என் இலட்சியதில் வெற்றி பெருவேன் என்ற
போராட்ட குனம்!

*****************************************நிகழ்காலம் நிதானித்தால்
என்ன?
வழியற்ற பாதை என
நினைத்து,
ஒளியற்ற பாதையில்
பயணித்து விடாதே!
சமுதாயம் உன்னை அடையாளம்
கானும்வரை...
அடையாளம் காட்டும் வரை.....
ஓடிக்கொண்டே இரு..!
உழைத்துக்கொண்டே இரு...!
ஜெயித்துக்கொண்டே இரு...!
ஒவ்வொரு தோல்வியிலும்.

***********************************************
உனக்குள் ஒரு திறமை ஒளிந்து கிடக்கின்றது,
முதலில் அதை கண்டுபிடி.
எதற்க்காகவும் வாழ்க்கையில் கவலை கொள்ளாதே,
ஏனெனில் எதுவுமே நிலையானது அல்ல.
சிந்தனைகளுக்கு உயிரூட்டம் கொடு,
நம்பிக்கையையும், தைரியத்தையும் மூலதனமாக்கு,
தோள் வலிமையையும், செயலாற்றலையும் பயன்படுத்து,
விடாமுயற்ச்சியை ஒரு ஆயுதமாய் கொள்,
உன் முன் நிற்க்கும் முட்டுக்கட்டைகளை உடைத்தெறி...!
இதோ நீ வெற்றியின் வாயிலில் நிற்க்கின்றாய்.
அதை உனதாக்கிக் கொள்.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு....!

**********************************************

இந்த நிலையும் மாறிவிடும்.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.இரா

Thursday, November 5, 2009

பாரத தேசம் ஏன் இன்றும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது?

உலகத்தின் ஒட்டு மொத்த வளமும் கொட்டிகிடக்கும் ஒரே இடம் நமது இந்தியா..! அனைத்து திறமைகளும் பண்புகளும் உள்ள மக்கள், நிலையான தட்ப வெட்ப நிலை, பரந்த நிலப்பரப்பு, தொன்மையான வரலாறு, இருந்தும் உலக அளவில் பாரத தேசம் ஏன் இன்றும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது?

இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக நிற்கும் செயல்களையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும், மக்களின் மனப்பான்மையையும் கண்டு கொதித்து கொண்டிருக்கும் இளைஞர்களில் நானும் ஒருவன்.

வெறுமனே கொதித்து கொண்டிருந்தால் நிலைமை மாறிவிடுமா என்ன?

இன்றைய பரந்து விரிந்து விட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவது என்பது அவ்வளவு எளிதான செயலோ விஷயமோ அல்ல. பழமையில் பழகி போய் விட்ட மக்களை மாற்றுவது கடினம், ஆரம்பத்தை மாற்றினால் அனைத்தும் மாறும்.

மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் தயாரா?

உங்களால் அடுத்த ஐந்து வருடத்திற்குள் உங்களின் அன்றாட நாட்களில் எத்தனை பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் சந்திக்க முடியும்..? அவர்களுடன் பேச உங்களால் நேரம் ஒதுக்க முடியுமா?

அவர்களுக்கு நமது நாட்டின் திறமைகளை பற்றியும் நமது வரலாற்றை பற்றியும், ஆற்ற வேண்டிய கடமைகளை பற்றியும், இன்றைய இந்தியா சந்திக்கும் பிரச்சினைகளை பற்றியும், அவர்களுடைய பாணியில் எளிதாக மனதில் ஆணித்தரமாக பதியும் வண்ணம் எடுத்து கூறுங்கள்.

அவன் படிக்கும் பாடங்களை விட அவன் ஆசிரியர் எடுத்துரைத்த கருத்துகளை விட அவனது பெற்றோர் போதித்ததை விட, ஒருபடிமேல் சரியான, முறையான தகவல்களை உங்களால் நூறு மாணவர்களுக்கு எடுத்துரைக்க முடியுமானால், அதை கவனத்துடன் கேட்க குறைந்தது ஐம்பத்து பேராவது இருப்பான், அதில் பத்து பேராவது அதை பற்றி சிந்திப்பான்.... அது போதும் சிந்திக்க ஆரம்பித்துவிட்ட நாளைய இந்தியாவால், எதிர்கால சந்ததிகள் தலை நிமிர்ந்து நிற்கும்.

மாற்றம் என்பது முனேற்றம் ......!

"என் நாடு விழிப்புறுக"

ஜெகதீஸ்வரன்.இரா