அகண்ட சாலைகள்
அனல்பறக்கும் வாகனங்கள் அவசரப் பயணம்...
அலறியடித்து ஓடும்
மனிதக் கூட்டம்,
சிவப்பில்
ஒரு கூட்டம் அடைபட,
பச்சையை நோக்கி
பாயும் ஒரு கூட்டம்
ஒருவன் தவறினால்
இன்னொருவன் தாறுமாறாய்; இதில் காதைக் கிழிக்கிற
சத்தம் வேறு... எதைத் தேடி இவர்கள் ஓட்டம்; எதற்க்காக இந்த அவசரம்; என அங்கலாய்த்துக் கொண்டன..
அந்த சிக்னல் கம்பத்தில்
அமர்ந்திருந்த மைனாக்கள்..!!
ஏன் மனித மனம் பொருள் தேடலிலேயே
வெந்து சாக வரம் பெற்றது...??
உண்மைலேயே ரொம்ப அருமையா இருக்குங்க ..!!
ReplyDeleteகலக்கல் ..!!