திசையறியா காதல் கடல்
சிரித்தே சிதைத்த மௌனப்புயல்
ஆர்பரித்தே அலையும் மனதின் சுழல்
அதனிடம் அடிமையாய் கரையின் குறை
உள்ளத்தே உறையும் கண்ணீர் நுரை....
பற்றி எரியும் இதயப் பிணம்
இன்னும் விரியும் சிந்தனை தினம்
சுவடெனப் பதிந்த நினைவுகள் வரம்
தொலைத்தே தாழ்ந்த துயருடன் சிரம்...
காற்றில் தேடிய கவிதையின் முகம்
வரைந்தே உறைந்த களைப்பில் அகம்
அவளுக்காய் தொலைத்த அவளின் நிழல்
திக்கற்ற வாழ்வென விரியும் கடல்...
திசையறியா வாழ்வோ தனிமைக் கடல்...!!!
வாழிய தாய்த் தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன். இரா
//சிரித்தே சிதைத்த மௌனப்புயல் //
ReplyDeleteசிதைந்து தெரித்தது தெரிகிறது வரிகளில்...