நீளும் பயணங்களில்
நிஜத்தை தொலைக்கிறேன்,
நிலையற்ற வாழ்வில்
என்னை தொலைக்கிறேன்,
ஓரறிவுப் புல்லும்
புத்துயிராய் பிறப்பெடுக்க;
உன்னை தொலைத்த
நான் மட்டும் ஏன்..
ஓசையின்றி
மரணித்துக் கொண்டிருக்கிறேன்..??
********************
என் அத்தனை வலியையும்
உன்னைப் பார்த்ததில் மறந்தேன்
ஆனால் அதைவிட கொடுமையை
உன்னைப் பிரிந்ததில் உணர்ந்தேன்..!!
********************
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகிறேன்..
உன் மெளனத்தின்
வெற்றியால்..!!
*********************
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா
//ஓரறிவுப் புல்லும்
ReplyDeleteபுத்துயிராய் பிறப்பெடுக்க;
உன்னை தொலைத்த
நான் மட்டும் ஏன்..
ஓசையின்றி
மரணித்துக் கொண்டிருக்கிறேன்..?? //
வலி உணரமுடிகிறது உணர்ந்திருப்பதால்..
@ தமிழரசி..
ReplyDeleteவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
வலியை ஒவ்வொரு வரியும் தருகிறது
ReplyDeleteஅருமை ஜெகதீஸ்வரன்
நன்றி
ஜேகே
படத்தில் நுனியில் அமர்ந்த கவிஞனின் போலவே... கவிதைகளும் நுனிக்கு அழைக்கின்றன.
ReplyDelete