அவசர உலகில்
விரையும் தருனங்களில்,
விரயமாகும் பொழுதுகளில்,
நாம் எதையோ தேடி அலைகின்றோம்.
ஒருநாள் அனைத்தும் முடிவிற்க்கு வரும்....!
அன்று வாழ்க்கையை
ஒருமுறை திரும்பிப்பாருங்கள்,
எதற்க்கு அதிக முகியத்துவம்
கொடுத்தீர்கள் என்று.....!
************************************************
தினக்கூலியாக இருக்கும் பாமரர் கூட
திருப்தியான வாழ்க்கை வாழ்கின்றனர்!
படித்து முடித்த பட்டதாரி
பட்டினியால் வாடுகின்றான்!
சிறுக சிறுக சேமித்தும்
சிறகொடிந்து கிடக்கும்
சில்லரை காசுகள்!
அர்த்தமற்ற தேவைகளுக்காக
அல்லல் படும் ஆழ் மனம்!
சிறகடித்து பறக்க வேண்டிய வயதில்
சிந்தனைகள் மண்டிக்கிடக்கும்
என் உள் மனம்!
இருப்பினும் என்றாவது ஒருநாள்
என் இலட்சியதில் வெற்றி பெருவேன் என்ற
போராட்ட குனம்!
*****************************************
நிகழ்காலம் நிதானித்தால்
என்ன?
வழியற்ற பாதை என
நினைத்து,
ஒளியற்ற பாதையில்
பயணித்து விடாதே!
சமுதாயம் உன்னை அடையாளம்
கானும்வரை...
அடையாளம் காட்டும் வரை.....
ஓடிக்கொண்டே இரு..!
உழைத்துக்கொண்டே இரு...!
ஜெயித்துக்கொண்டே இரு...!
ஒவ்வொரு தோல்வியிலும்.
***********************************************
உனக்குள் ஒரு திறமை ஒளிந்து கிடக்கின்றது,
முதலில் அதை கண்டுபிடி.
எதற்க்காகவும் வாழ்க்கையில் கவலை கொள்ளாதே,
ஏனெனில் எதுவுமே நிலையானது அல்ல.
சிந்தனைகளுக்கு உயிரூட்டம் கொடு,
நம்பிக்கையையும், தைரியத்தையும் மூலதனமாக்கு,
தோள் வலிமையையும், செயலாற்றலையும் பயன்படுத்து,
விடாமுயற்ச்சியை ஒரு ஆயுதமாய் கொள்,
உன் முன் நிற்க்கும் முட்டுக்கட்டைகளை உடைத்தெறி...!
இதோ நீ வெற்றியின் வாயிலில் நிற்க்கின்றாய்.
அதை உனதாக்கிக் கொள்.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு....!
**********************************************
இந்த நிலையும் மாறிவிடும்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.இரா
simply great jegadesh - A.Baskaran
ReplyDeleteJegadesh, Please correct the spelling mistake in your profile "Kavithai Kirukkal" - A.Baskaran
ReplyDeleteஅவசர உலகில்
ReplyDeleteவிரையும் தருனங்களில்,
விரயமாகும் பொழுதுகளில்,
நாம் எதையோ தேடி அலைகின்றோம்.
ஒருநாள் அனைத்தும் முடிவிற்க்கு வரும்....!
அன்று வாழ்க்கையை
ஒருமுறை திரும்பிப்பாருங்கள்,
எதற்க்கு அதிக முகியத்துவம்
கொடுத்தீர்கள் என்று.....!/
மிகவும் அருமை அனைவரும் யோசிக்கவேண்டியவைகள்தான்.. தொடர்ந்து எழுதுங்கள் ..
its a nice one
ReplyDeletemy dear brother...