Thursday, November 5, 2009

பாரத தேசம் ஏன் இன்றும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது?

உலகத்தின் ஒட்டு மொத்த வளமும் கொட்டிகிடக்கும் ஒரே இடம் நமது இந்தியா..! அனைத்து திறமைகளும் பண்புகளும் உள்ள மக்கள், நிலையான தட்ப வெட்ப நிலை, பரந்த நிலப்பரப்பு, தொன்மையான வரலாறு, இருந்தும் உலக அளவில் பாரத தேசம் ஏன் இன்றும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது?

இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக நிற்கும் செயல்களையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும், மக்களின் மனப்பான்மையையும் கண்டு கொதித்து கொண்டிருக்கும் இளைஞர்களில் நானும் ஒருவன்.

வெறுமனே கொதித்து கொண்டிருந்தால் நிலைமை மாறிவிடுமா என்ன?

இன்றைய பரந்து விரிந்து விட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவது என்பது அவ்வளவு எளிதான செயலோ விஷயமோ அல்ல. பழமையில் பழகி போய் விட்ட மக்களை மாற்றுவது கடினம், ஆரம்பத்தை மாற்றினால் அனைத்தும் மாறும்.

மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் தயாரா?

உங்களால் அடுத்த ஐந்து வருடத்திற்குள் உங்களின் அன்றாட நாட்களில் எத்தனை பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் சந்திக்க முடியும்..? அவர்களுடன் பேச உங்களால் நேரம் ஒதுக்க முடியுமா?

அவர்களுக்கு நமது நாட்டின் திறமைகளை பற்றியும் நமது வரலாற்றை பற்றியும், ஆற்ற வேண்டிய கடமைகளை பற்றியும், இன்றைய இந்தியா சந்திக்கும் பிரச்சினைகளை பற்றியும், அவர்களுடைய பாணியில் எளிதாக மனதில் ஆணித்தரமாக பதியும் வண்ணம் எடுத்து கூறுங்கள்.

அவன் படிக்கும் பாடங்களை விட அவன் ஆசிரியர் எடுத்துரைத்த கருத்துகளை விட அவனது பெற்றோர் போதித்ததை விட, ஒருபடிமேல் சரியான, முறையான தகவல்களை உங்களால் நூறு மாணவர்களுக்கு எடுத்துரைக்க முடியுமானால், அதை கவனத்துடன் கேட்க குறைந்தது ஐம்பத்து பேராவது இருப்பான், அதில் பத்து பேராவது அதை பற்றி சிந்திப்பான்.... அது போதும் சிந்திக்க ஆரம்பித்துவிட்ட நாளைய இந்தியாவால், எதிர்கால சந்ததிகள் தலை நிமிர்ந்து நிற்கும்.

மாற்றம் என்பது முனேற்றம் ......!

"என் நாடு விழிப்புறுக"

ஜெகதீஸ்வரன்.இரா

3 comments:

  1. :)

    thala... nalla eluthuringa.... niraiya eluthunga

    naan unga blog yai follow seiyuren

    ReplyDelete
  2. blog layout change pannunga sagaa...

    word verification vendame

    ReplyDelete
  3. innum detail ah eluthunga...

    tamilmanam, tamilish la serunga

    ReplyDelete