Sunday, March 13, 2011

அரபு நாடுகளில் வாடும் கடைநிலை தமிழர்களுக்காக..!!


அங்கு
காத்துக் கொண்டிருக்கும்
பத்தினிக்காக
இங்கு பட்டினி கிடக்கின்றாய்..

உன் கண்ணீர் துளிகள்
இமைகளைத் தாண்டும் முன்
வெப்பத்தில் 
உறைந்து போகிறது..

நன்கு படித்தவன்
நாடுகடந்தான்;
நாதியற்று நீ
புலம் பெயர்ந்தாய்,
அறிந்தே அடிமைகளாய்…
என்ன வரம் பெற்றாய்
என்ன குற்றம்தான் செய்தாய்.?
சாட்டையடி சுவடும் இல்லை,
கல்லெறிக் காயமும் இல்லை,
உன் இரத்தம் மட்டும் கொட்டுகிறது
வியர்வையென உருமாறி..

உன்னை கண்டும் காணாமல்
கடந்து செல்கிறேன்
கண்ணாடி அடைத்த
கதவுகள் வழியே..

ஏனோ நான் பயணிக்கும்
இந்த சாலையின் நிறம்
எனக்கு தெரிகிறது
எம் தொழிலாளர்களின்
காய்ந்து உறைந்துபோன
கருப்பு இரத்தங்களாய்…

அறிவைப் பெற்றவன்
தாய்நாடு காத்தால்
அடித்தட்டு வர்க்கம்
அடைபடும்
அடிமை ஏற்றுமதியிலிருந்து
என்னையும் சேர்த்து…!! 



வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

2 comments:

  1. குப்பையை பொறுக்கவும், வானளாவிய கட்டடங்கள் கட்டவும்
    உயிரையே கொடுத்து உழைப்பது தன் குடும்பத்தை காப்பாற்றத்தான்.

    உங்களை வணங்குகிறோம்......

    ReplyDelete
  2. சிறந்த படைப்புகளுடன் கூடிய வலைத்தளம்! பாராட்டுக்கள் ஜெகதீஷ்!

    ReplyDelete