Friday, September 24, 2010

வளைகுடா நாடுகளில் வாடும் கடைநிலை தமிழர்களுக்காக..!!

காலைக் கழனிதனில் நெஞ்சுயர்த்தி
நீ உழைத்த உழைப்பங்கே..
பாலைக் கருவேலமர நிழல் ஒதுங்கி
கருகும் உன் நிலை இங்கே..!!

ஊரில் சிரித்தாலும் அழுதாலும்
உடனிருந்த உன் உறவுகள்..
வெறும் அலைபேசி வலைகளுக்குள்
அடிமாடாய் இன்றிரவுகள்..!!

நிறைவான
பணமின்றி மனம் நிறைந்த வாழ்வங்கே..
பணமுண்டு, உணவுண்டு
தேடுகிறாய் மனம் முழுதும் நிறைவேங்கே..!!

கடனுக்காய் அடகுவைத்தாய்
தோழா உன் நல்வாழ்க்கை..
யார் வந்து மீட்டெடுப்பார்
தொலைந்த உன் இல்வாழ்க்கை..!!

முகம் மறந்த உன் குழந்தை
அழைக்கிறதா மாமன் என்று..
வெயிலில் வெந்து செத்த
மீதி உயிர் நொந்து சாகுமே அன்று..!!

போரில்லை, புரட்சியில்லை
எதிலியானாய் தெரிந்தே நீ..
புறப்படடா என் தோழா
நிதர்சனங்கள் புரிந்தே நீ...!!     

வளைகுடா நாடுகளில் வாடும் கடைநிலை தமிழர்களுக்காக..!!

அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா  

3 comments:

  1. படங்களின் உள் அர்த்தம் உன் வரிகளில் அறியவைத்தாய்.
    வெறும் இரு படம் கண்டு வருந்துது எங்கள் நெஞ்சம்.
    பதியப்படா உண்மைகளை காணுது உங்கள் கண்கள்.
    கண்டதை சொல்லுங்கள், கேட்டு சொல்லுங்கள் கேட்கும் காதுகள்தான் உண்டு தமிழகத்தில்.
    உதவும் கைகளோ,
    அந்த இருளுக்கு ஓர் உதய சூரியனோ.
    பசியாற்ற இலைகளோ மாங்கனிகளோ
    அந்த குறையை எடுத்துக்கூறும் முரசுகளோ.
    அவர்கள் வெயிலுக்கு குடைகளோ.

    இல்லைங்கு இங்கு
    ௨௦௧௧-ம் தேர்தல் முடியும்வரை மட்டுமல்......

    ReplyDelete
  2. வரிகள் நெஞ்சை உலுக்கின நண்பா...உணர்வுகளை ஊடுருவின....
    உங்கள் வலைப்பதிவின் தலைப்பகுதியிலும் தமிழ் வாழ்கிறது...அருமை..அருமை ..

    ReplyDelete
  3. வரிகளின் வலிகள்.. தொடருங்கள், நன்றி.

    ReplyDelete